சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்றை ஈரான் அதிகாரிகள் தடுத்துள்ளனர். 👉 இந்தக் கப்பலில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட பணிக்குழாமினர் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 🛑 ஈரான் நடவடிக்கைக்கான காரணங்கள்: நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை. தப்பிச் செல்ல முயற்சித்தமை. கப்பலின் ஆவணங்களில் குறைபாடுகள் காணப்பட்டமை. இக்காரணங்களின் அடிப்படையில் நேற்று (டிசம்பர் 12) மாலை குறித்த கப்பல் ஈரானிய அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகின் குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்ட நாடுகளில் ஈரானும் ஒன்று என்பதால், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு கடல் மார்க்கமாக எரிபொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களில் ஈரான் இவ்வாறான பல கப்பல்களைத் தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பணியாற்றும் இலங்கையர்களின் நிலை குறித்து மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஈரான் #எரிபொருள் #கப்பல் #இலங்கை #கடத்தல் #சர்வதேசசெய்தி #ஓமான்வளைகுடா #FuelSmuggling
🚢 அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! 🚨 – Global Tamil News
7