2
முறிந்த வாழைகளின் கதை? யாழில் கமநல சேவைகள் திணைக்களம் வாழை மற்றும் சிறு பயிர்களுக்கான அழிவுக்கான விண்ணப்ப படிவத்தை இன்று சனிக்கிழமை 13 திகதி கோப்பாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.அனேகமான வாழை விவசாயிகள் தங்கள் தோட்டங்களை துப்பரவு செய்து முடித்துள்ள நிலையில் படிவம் வந்துள்ளது. இதனிடையே புயலின் போது முறிந்த வாழைகளது புகைப்படங்களை கோரும் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்;துள்ளது.வெள்ள அனர்த்தம் நடைபெற்று ஒரு 15நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது முறிந்த மரங்களது புகைப்படங்களை தந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.