3
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.