வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் (Morocco) உள்ள ஃபெஸ் (Fes) நகரில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. விவரங்கள்: ஃபெஸ் நகரில் இரண்டு பழைய கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும், 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மொராக்கோவில் தேசிய அளவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Spread the love MoroccoTragedyஉயிரிழப்புகட்டிடங்கள் இடிந்து விபத்துகட்டிடவிபத்துமொராக்கோ
🇲🇦 மொராக்கோவில் 2 கட்டிடங்கள் இடிந்து விபத்து 22 பேர் உயிரிழப்பு! 💔 – Global Tamil News
3