வெள்ளத்தில் சிக்கிய பேருந்து – உயிரிழந்த யாழ். இளைஞனின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய்

by ilankai

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார், அந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் மரண சான்றிதழ் வழங்கப்பட்டதும் மீதி 09 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் , குறித்த இளைஞனின் தொலைபேசியில் இருந்தே , தகவல்கள் வெளியே சொல்லப்பட்டது. அதனாலேயே , பேருந்தில் பயணித்த 69 பேரில் 67 பேரின் உயிரினை காப்பாற்ற முடிந்தது. குறித்த இளைஞன் கூரையில் இருந்து வெள்ளத்தினுள் விழுந்த நிலையில் , தவறுதலாக மீட்கப்படாததால்  , இளைஞன் உயிரிழந்துள்ளார். அதேவேளை மீட்கப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் வைத்தியசாலையில் , சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts