தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதி அனுசரணையில், அதன் மன்னார் மாவட்டக் கிளையுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் மனிதாபிமானப் பணி நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. 🌀 ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 🎁 உதவி வழங்கப்பட்ட பகுதிகள்: பேசாலை 25 வீட்டுத்திட்டம் ஜோசப்வாஸ்நகர் ஜீவபுரம் ஜிம்றோன்நகர் சாந்திபுரம் உப்புக்குளம் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் பனங்கட்டுக்கொட்டு கொண்டச்சிகுடா இ சிலாவத்துறை மன்னார் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் முறையாகக் கையளிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுத்து உதவிய தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கு எமது நன்றிகள்!
🤝 மனித நேயப் பணி: மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி! – Global Tamil News
3