தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

by ilankai

சீரற்ற காலநிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. அந்த வகையில் தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற்செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற்செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.டித்வா புயலின் விளைவால் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்றிருந்த நிலையில், அவை இயல்பு நிலைக்கு திரும்பி, பின், மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.இதனால் தம்பலகாமம் சம்மாந்துறைவெளி, பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவன செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Related Posts