உதய கம்மன்பில : நெடுந்தீவு பக்கம்!

by ilankai

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,312 குடும்பங்களைச் சேர்ந்த 51,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர. இரண்டு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.அத்தகைய சூழலில், அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்காக 25,000 ரூபா ஒதுக்கியுள்ளது.அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 36கோடியாகும்.இதில், 1216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு 3கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகுமென உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts