நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி, கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார்.  உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் கடலில் குதித்து, தேடிய நிலையில், நீண்ட நேர தேடலின் பின்னர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts