அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம் இன்று காலை நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது! 🌍 சர்வதேச ஒத்துழைப்பு நாடு முழுவதும் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக அமெரிக்க விமானப் படையின் இரு Super Hercules விமானங்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளன. இந்த விமானங்கள் இலங்கை விமானப் படையினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றைய தினம் கொழும்பு வந்தடைந்த இந்த விமானம், இன்று கொழும்பில் இருந்து வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இந்த உதவிகள் விநியோகிக்கப்படுவது, வடக்கில் உள்ள மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் அளிக்கிறது. Spread the love C-130J விமானம்அமெரிக்க விமானப் படைநிவாரணப் பொருட்கள்யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு
🇱🇰🤝🇺🇸 நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்! – Global Tamil News
6