நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டரில் (ஸ்டோரோ ஸ்டோர்சென்டர்) துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்ததாக நோர்வே போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை என்பதனால் அந்த வணிக வளாகத்தை திறப்பது பாதுகாப்பானது என்றும் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.சந்தேக நபர் 19 வயது இளைஞன் என்றும் அவர் மேல் நோக்கி கூரையில் ஒரு துப்பாக்கியால் சுட்டதாகவும், சந்தேக நபர் ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் கத்தியையும் வைத்திருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டாம் பெர்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.ஒஸ்லோவில் அமைந்துள்ள ஸ்டோரோ ஸ்டோர்சென்டர் என்ற வணிக வளாகத்தில் 140 வர்த்தக நிலையங்களும் கபேக்களும் உள்ளே அமைந்துள்ளன.
ஒஸ்லோவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
9