மீண்டும் வந்தது இந்திய படை!

by ilankai

இலங்கையின் வடபுலத்திற்கு சுமார் 35வருட கால இடைவெளியின் பின்னராக இந்திய படை உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலம் இந்திய இராணுவ பொறியியல் அணியினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில் புனரமைப்பு வேலைகளை  ஆரம்பித்திருந்தனர்.அவர்களுக்கு உதவியாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதனிடையே மண்சரிவு அனர்த்ததால் சிக்கியவர்ளை மீட்பு பணி மற்றும் நிவாரண விநியோக பணியிலும் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் குழுவினர் இன்று (08) இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

Related Posts