வீட்டில் சங்கு! – Global Tamil News

by ilankai

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25) இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மாட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts