வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! – Global Tamil News

by ilankai

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது. வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினரான அகி என அழைக்கப்படும் பரமசிவம் துசியந்தன் (வயது 43) கடந்த 04ஆம் திகதி சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்வியங்காட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று , பூதவுடல் தகன கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி கிரியைகளில் அரசியல் பிரமுகர்கள் ஊரவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர்.

Related Posts