தெஹிவளைப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 🩸 நடந்தது என்ன? தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே, ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 🏃♂️ மர்ம நபர் தப்பியோட்டம்! சம்பவம் நடந்த உடனேயே துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினா் கூறியுள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரையிலும் மீட்கப்படவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பதும் இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை. தெஹிவளைப் காவல்துறையினா் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை – Global Tamil News
4