ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை அனர்த்த நிலைமை தொடர்பாக உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். 💰 நிவாரணம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் நிவாரண நிதி விடுவிப்பு: அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 🚨குறைநிரப்புப் பிரேரணை: நிவாரணப் பணிகளுக்காக மேலும் 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 🚨வீட்டு உபகரண உதவி: வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் சேதமடைந்த வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்ய 50,000 ரூபாய் வழங்கப்படும். 🚨வாடகைக் கொடுப்பனவு: முகாம்களில் இருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவு. 👨👩👧👦 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான விசேட கொடுப்பனவு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்: 🚨இரண்டுக்கும் மேற்பட்டோர்: ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாய். 🚨இரண்டு உறுப்பினர்கள் மட்டும்: ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் 🏠 வீடுகள் மற்றும் விவசாயத்திற்கான உதவி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு: புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். 🚨காணி இல்லாதவர்களுக்கு: புதிய வீடுகளை நிர்மாணிக்க அரசாங்க காணி வழங்கப்படும். அரசு காணி இல்லாவிட்டால், காணி ஒன்றை கொள்வனவு செய்ய 50 இலட்சம் ரூபா வரை வழங்கப்படும். 🚨பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு: புனர்நிர்மாணம் செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 25 இலட்சம் வழங்கப்படும். 🚨பயிர்ச் செய்கை இழப்பீடு: 🚨நெல், சோளம் மற்றும் தானியப் பயிர்களுக்கு: ஹெக்டேருக்கு 150,000 ரூபாய் எகாய்கறிச் செய்கையாளர்களுக்கு: ஹெக்டேருக்கு 200,000 ரூபாய். 💡 முக்கிய அரசியல் அறிவிப்பு சொத்து வரி (Wealth Tax): சொத்து வரி 2026 ஆம் ஆண்டில் விதிக்கப்படமாட்டாது; அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும். இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 📊 அனர்த்தத்தின் பாதிப்பு சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 🚨5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 🚨55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 🙏 தேசத்திற்கான செய்தி மனிதநேயப் பாராட்டு: எந்தவொரு அனர்த்தத்திலும் இலங்கையர்களிடம் உள்ள மனிதநேயத்தைப் பறிக்க முடியாது என்று வலியுறுத்திய ஜனாதிபதி, முப்படையினர், பொலிஸார், அரச சேவையாளர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கையர்களின் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். 💡 அவசரகாலச் சட்டம்: அனர்த்தத்தை திறம்பட எதிர்கொள்ள பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது, மாறாக நிவாரணப் பணிகளுக்குத் தடையாக குழப்பம் விளைவிப்பவர்களை கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
🚨 அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு! – Global Tamil News
1