1
யாழ்ப்பாண மாநகர சபையின் பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசாவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது. குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.