இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞரான உலகநாயகன் கமல் ஹாசன், தனது நீண்ட சினிமா பயணம் குறித்து அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் ஓய்வு பெறுவது பற்றிய தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடந்த ஒரு கலை மற்றும் இலக்கிய விழாவில் கலந்துகொண்டபோது அவரிடம், “இன்றைய தலைமுறையினர் இளைய நடிகர்களை எதிர்பார்ப்பதால், மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், புதிய கூட்டணிகள் உருவாகுவது மிகவும் முக்கியம். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதைப் ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள் எனவும் மோசமான படங்களில் நடிக்கும்போது தனக்கு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால், அப்போது எனது நண்பர்கள், இந்தத் தோல்வியுடன் விலக வேண்டாம், ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்துவிட்டு ஓய்வு எடுங்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தைத்தான் நான் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்துள்ளாா். கமல் ஹாசன், தனது திரைத்துறைப் பயணத்தை ஒரு பிரம்மாண்ட வெற்றியுடன் முடித்துக்கொள்ள விரும்புவதைப் போல மறைமுகமாகக் கூறியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைச் சேவை செய்து வரும் உலகநாயகனின் இந்த முடிவு, திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன. அடுத்ததாக, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திற்காகவும், மற்றுமொரு பிரம்மாண்டப் ப டத்திற்காகவும் தயாராகி வரும் கமல் ஹாசன், தான் தேடும் அந்த ‘பெரிய வெற்றிப் படம்’ எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது!
ஓய்வு பெறுகிறாரா உலகநாயகன் ? – Global Tamil News
3