ஏவிஎம் சரவணன் காலமானார் – Global Tamil News

by ilankai

 . தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவரான, ஏவிஎம் ஸ்டூடியோஸின் உரிமையாளரும், மூத்த தயாரிப்பாளருமான ஏவிஎம். சரவணன் அவர்கள் இன்று (டிசம்பர் 4, 2025) சென்னையில் காலமானார் . திரைப்படத் தயாரிப்பில் நூறாண்டுகளைக் கண்ட ஏவிஎம் நிறுவனத்தை வழிநடத்தியதில், திரு. சரவணன் அவர்களின் பங்கு மகத்தானது. தன்னுடைய கலை மற்றும் வர்த்தகப் பார்வையால், பல தரமான திரைப்படங்களை அளித்து, தமிழ்த் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை  தயாரித்துள்ள ஏவிஎம் நிறுவனம் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்திரையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவரான  ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும்   கவனித்துள்ளஇவர்  தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

Related Posts