1
அம்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறைந்துள்ளதுடன், பல வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.