5
தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர்.போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.