இலங்கையில் மோசமான வானிலை காரணமாக இன்று புதன்கிழமை இரவு நிலவரப்படி 479 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை காணாமல் போயுள்ள 350 பேரினை தேடும் பணிகள் தொடர்கின்றது.இதனிடையே இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க தினமாவது அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு கவனம் செலுத்தப்படாததற்கு நாங்கள் வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட நான்காவது துயரம் இதுவாகும்.ஈஸ்டர் தாக்குதல், கொரோனா நெருக்கடி, நாட்டின் திவால்நிலை மற்றும் சூறாவளி போன்ற நெருக்கடிகளை நாம் கடந்து வந்துள்ளோம்.பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க நாளாவது அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும், எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.
350 பேர் நிலை தெரியவரவில்லை!
4
previous post