அவசர மருத்துவ உதவிகளை ஏற்றிய இந்திய விமானப்படையின் C-17A விமானம் நேற்று செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்தது.இந்த மருத்துவ பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய கள வசதிகள் அடங்கி உள்ளன.இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்த உதவிப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்ததோடு இராணுவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டிரால் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் அவற்றை பொறுப்பேற்றனர்.அவசர நிலைமைகளில் துரிதமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமையான இரு கள மருத்துவமனை அலகுகளும் இதில் அடங்கும். இவற்றில் ஒரு அலகு வெலிமடை பகுதியில் நிறுவப்பட உள்ளது.இது தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து மருத்துவர்கள், வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் ஏனைய சுகாதார நிபுணர்கள் உட்பட 73 மருத்துவ நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்பி வைத்தது இந்தியா
0