செவ்வந்திக்கு உதவிய   யாழ்ப்பாணத்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு  – Global Tamil News

by ilankai

செவ்வந்திக்கு உதவிய   யாழ்ப்பாணத்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு  by admin December 3, 2025 written by admin December 3, 2025 பாதாள உலகக்குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு யாழ் வாசிகளதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த கனகராசா ஜீவராசா என்ற யாழ்ப்பாண சுரேஷ்  மற்றும் அந்தோணிப்பிள்ளை ஆனந்தம் ஆகிய இருவரையுமே  எதிா்வரும்  டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனகராசா ஜீவராசா  செவ்வந்தியைப் போலவே இருக்கும் தாக்ஷி என்ற பெண்ணை அறிமுகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு  நேபாளத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார். அந்தோணிப்பிள்ளை ஆனந்தம் செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய “ஜே.கே. பாய்” என்ற கென்னடி பஸ்தியன் பிள்ளைக்கு படகு வழங்கியதாகக் குற்றம்  சுமத்தப்பட்டு   நேபாளத்தில் கைது செய்யப்பட்ட “ஜே.கே. பாய்” அளித்த தகவலின் அடிப்படையில்   கைது செய்யப்பட்டார்.  கடந்த ஒக்டோபரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்  தடுப்புக் காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னா்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Related News

Related Posts