கொலை ஒன்றை செய்வதற்கு தயாராக இருந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவாின் கூலிப்படை கொலையாளி ஒருவரை கைது செய்துள்ளதாக மீட்டியாகொட காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கைது செய்யப்பட்டவா் வாழைச்சேனையைச் சேர்ந்த 36 வயதுடைய நபா் எனத் தொிவிக்கப்படுகின்றது. சந்தேகநபா் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் , அக்காலப்பகுதியில் கருணா தரப்பில் இவர் இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தொிய வந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் காலி சிறைச்சாலையில் 11 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த காலப்பகுதியில் கரந்தெனிய சுத்தாவுடன் அறிமுகம் அறிமுகமானதாகவும் கரந்தெனிய சுத்தா நேரடியாகவே குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மீட்டியாகொட காவல்துறையினா் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
கொலை ஒன்றுக்கு தயாராக இருந்த முன்னாள் புலி உறுப்பினர் – Global Tamil News
10