ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாக அறியப்படும் ஏ.எப்.டி. (AfD – Alternative für Deutschland / ஜெர்மனிக்கான மாற்று) கட்சி, புதிதாகத் தொடங்கியுள்ள அதன் இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்ற ஏ.எப்.டி., கட்சியின் இளைஞர் பிரிவான ‘இளம் மாற்று’ என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் ‘தீவிரவாதக்குழு’வாக வகைப்படுத்தியிருந்ததையடுத்து, அது கலைக்கப்பட்டு, ‘ஜெர்மன் தலைமுறை’ என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.எப்.டி. கட்சியின் கொள்கைகள் மற்றும் அதன் புதிய இளைஞர் அமைப்பை எதிர்த்து இடதுசாரி மற்றும் மத்தியவாதக் குழுக்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கற்கள் வீசப்பட்டதாகவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தலையிட்டு கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. ஜெர்மனியில் வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியல் சக்திகளுக்கு இடையேயான கருத்தியல் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் அங்குள்ள அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை – Global Tamil News
5