அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பாரிய சேதங்களைச் சரிசெய்து, நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பிரதான நோக்குடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழுவை நியமித்துள்ளார். இந்த நிதியம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டரீதியான நிதியாக நிறுவப்படவுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை மதிப்பீடு செய்தல், முன்னுரிமைகளை நிர்ணயித்தல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற அத்தியாவசிய பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். குழுவின் தலைவராக கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ (தொழில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்) வும் ஒருங்கிணைப்பாளராக ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு (ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் நிதியத்தின் முன்னணி ஆளுமைகளாக வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், மேல் மாகாண ஆளுநருமான ஹனீஃப் யூசுப் , நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும , ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன், எயிட்கன் ஸ்பென்ஸ் துணைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, பிராண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரோஃப் ஒமர் , LOLC இன் நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் புதிய குழு – Global Tamil News
0
previous post