திருகோணமலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி! – Global Tamil News

திருகோணமலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி! – Global Tamil News

by ilankai

திருகோணமலையில் இன்று (01.12.25) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் காவற்துறை  பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் இந்த துப்பாக்கி பிர​யோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சீன துறைமுக நகர் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts