சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5 இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.இந்தக் கடற்கடையினர் அப்பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்ததாக டற்படை செய்தித் தொடர்பாளர் கப்டன் கயான் விக்ரமசூரியதெரிவித்தார்.சவாலான வானிலைக்கு மத்தியிலும் ஐந்து உடல்களையும் மீட்க அதிகாரிகள் பணியாற்றியதால், மாலை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்தன என்று அவர் மேலும் தெரவித்தார்.இந்த ஐந்து கடற்படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுண்டிக்குளத்தில் 5 கடற்படையினர் உயிரிழப்பு!
6