7
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (30) பிற்பகல் வென்னப்புவ மற்றும் லுனுவில இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானது.பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தியில் இருந்த ஐந்து பேர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வென்னப்புவ பகுதியில் விபத்துக்குள்ளான விமானப்படை உலங்கு வானூர்தியின் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.