வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கதலைவர் பா.வீரசுரேந்திரன் தெரிவித்ததாவது, வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தர்களது ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட 83ஆவது இரத்ததான முகாம் நேற்றைய தினம் புதன்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அந்த இரத்த தான முகாமை ஒருங்கிணைத்து முன்னெடுத்தோம்.யாழ்ப்பாணத்தில் தற்போது பெரும் குருதித்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை ஈடுசெய்வதற்கு பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தோம். ஆனால் இந்தப் பணிகளுக்கு புலனாய்வுத் துறையால் பெரும் நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்டது.குறித்த இரத்ததான முகாம் ஆரம்பமானது முதல் வல்வெட்டித்துறை பொலிஸ் தரப்பு தொடங்கி புலனாய்வுப் பிரிவினர் வரை மாறிமாறி விசாரணைகளை மேற்கொண்டனர்.எமக்கு மன உளைச்சலைத் தரும் வகையில் இந்தச்செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. கெடுபிடிகள் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படுமாக இருந்தால் அந்த நாளுடன் இரத்ததான சேவையில் இருந்து முற்றாக விலகிவிடுவேன் என்றார்.
வல்வெட்டித்துறையில் இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை
3