2
கன மழையுடனான காலநிலைகாரணமாக அம்பாறை சாய்ந்தமருது – கரைவாகுப்பற்று ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒதே குடும்பத்தினைச் 03 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர் எனஅ் தொிவிக்கப்பட்டுள்ளது விபத்தில் 62 வயதுடைய கணவன், 59 வயதுடைய மனைவி மற்றும் அவர்களின் 06 வயதுடைய பேரப்பிள்ளை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர். Spread the love அம்பாறைகன மழைகார்சாய்ந்தமருதுபேரப்பிள்ளை