யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! – Global Tamil News
0
previous post