2
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100 போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணொருவரும் , கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.