பேராறு குளத்தின் வான் கதவு திறப்பு – Global Tamil News

by ilankai

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘பேராறு’ குளத்தின் வான் கதவு ஒன்று நேற்றைய தினம் (26)  திறக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் பேராறு குளத்தின் வான்  கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகின்றது. எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது. எனவே பறங்கி ஆற்றின் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச மக்கள்  மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேய்ச்சல் தரைக்காக கால் நடைகளை கொண்டு சென்ற பண்ணையாளர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பாதுகாப்புக் கருதி திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பில் இருக்குமாறும்   மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts