ஒரே பார்வையில் – இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்! – Global...

ஒரே பார்வையில் – இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்! – Global Tamil News

by ilankai

பலபகுதிகளில் மின்சாரம் தடை! இலங்கையில் மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “டிட்வா” ஆக உருவெத்துள்ளது! வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “டிட்வா” என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. “டிட்வா” என்ற பெயர் ஏமன் பரிந்துரைத்தது மற்றும் அதன் தனித்துவமான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயர் பெற்ற சோகோட்ரா தீவில் உள்ள டெட்வா லகூனைக் குறிக்கிறது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் UN ESCAP வெப்பமண்டல சூறாவளிகளுக்கான குழுவால் பராமரிக்கப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலைப் பின்பற்றுகிறது, இது உறுப்பு நாடுகளின் பங்களிப்புகளைப் பயன்படுத்துகிறது. “டிட்வா” என்பது இந்த பகிரப்பட்ட அமைப்பிற்குள் ஏமனின் கடற்கரை மற்றும் கடல் பாரம்பரியத்தை குறிக்கிறது. மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது! இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், மோசமான வானிலை காரணமாக 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.  அத்துடன், கண்டி, கங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாக வீடுகளில் இருந்து பாதுகாப்புக்காக ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அந்த வீடு மண்சரிவில் சிக்கியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களில் மூவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.  அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் காரணமாக 6 மரணங்கள் பதிவாகியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்

Related Posts