பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்..ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு..ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை..அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறதுபல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சுடரினை கேணல் கிட்டு அவர்கள் பிரித்தானியாவில் பணியாற்றிய காலம் தொடக்கம் தேசிய செயற்பாடுகளோடு பயணித்துக்கொண்டு இருப்பவரும் அரசியல் ஆய்வாளருமான திரு சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பளார் செல்வி யென்சியா நியூட்டன்அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.தமிழீழ தேசியகொடியினை சிறுத்தை படையணியின் சிறப்புத் தளபதியும் அனைத்துலக மகளிர் அமைப்பின் பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.தொடர்ந்து தணியாத தாகமும் தமிழீழ இலட்சியமும் கொண்ட மாவீரர்களின் கல்லறைகளுக்கு கொடிவணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உன்னதமான முதன்மைச் சுடரினை முன்னாள் மற்றும் தமிழீழ உள்ளகப் பலனாய்வுத்துறையின் பொறுப்பாளரும்இறுதிக்கள புலனாய்வுத்துறை பொறுப்பாளருமான மாணிக்கவாசகர் அருட்செல்வன் எனும் இயற்பெயர் கொண்டவீரவேங்கை பிரதாப் அல்லது ஆதித்தன் அவர்களின் துணைவியரும் மதுசங்கர் ரங்கசாமி எனும் இயற்பெயர் கொண்ட மேஜர் இளநிலவன் அல்லது நிலவன் அவர்களின் சகோதரியுமான நிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்
5