300 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய கனமழை – 16 போ் பலி – Global Tamil News

by ilankai

தாய்லாந்தில் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய அளவுக்கு ஏற்ப ட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 10 போ் உயிாிழந்துள்ளனா். தாய்லாந்து மக்கள் சமீபத்தில்  இந்த  அளவுக்கு கடுமையான வெள்ளத்தை   காணவில்லை எனத் தொிவிக்கப்படுகின்றது கடந்த வாரத்தில் தாய்லாந்து தெற்கில் உள்ள பத்து மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  மலேசியாவின் எல்லையை அண்மித்த வணிக மையமான  ஹாட் யாய் நகரம், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 335 மில்லிமீற்றர் மழையைப் பதிவு செய்துள்ளது. நகரத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, இடைவிடாத கன மழை அயல் நாடுகளையும் பாதித்துள்ள  நிலையில் வியட்நாமில், ஒரு வாரத்தில் இறப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மலேசியாவில், 19,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில்2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்      இராணுவக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன்  நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related Posts