இன்று காலை ஹாங்காங்கில் (Hong Kong) உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதும் அச்சத்தை அதிகரித்துள்ளது. ஹாங்காங் அருகே தாய் போ பகுதியிலுள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகலில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்காக கட்டிடங்கள் முழுவதும் மூங்கில் கட்டைகள் மற்றும் பச்சை வலைகள் போர்த்தப்பட்டிருந்தது. இந்த மூங்கிலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைரோபோம் என்ற பொருளால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தான், தீ மிக வேகமாக பரவியதாக அரச அதிகாரிகள் தொிவிக்கின்றனா் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை – Global Tamil News
10