தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை ஒரு சூட்கேஸ்களில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அவர்களின் உடல்களைச் சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த தாய் ஒருவருக்கே நீதிமன்றம் இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு எட்டு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகளை கொலை செய்ததற்காக செப்டம்பரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், இன்று புதன்கிழமை (25) ஹக்கியுங் லீ என்பவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நியூசிலாந்து “சூட்கேஸ் கொலைகள்” என்று அழைக்கப்பட்டது. தென் கொரியாவில் பிறந்த லீ, குழந்தைகளைக் கொன்றதனை ஒப்புக்கொண்டுள்ளாா். குழந்தைகளின் தந்தை புற்றுநோயால் இறந்து ஒரு வருடம் கழித்து இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. . குற்றஞ்சாட்டப்பட்ட லீயின் வழக்கறிஞர்கள் குறைந்த தண்டனைகளை வழங்குமாறு கோரியிருந்தனர் எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஜெஃப்ரி வென்னிங், 45 வயதான லீக்கு 17 ஆண்டுகள் பரோல் இல்லாத குறைந்தபட்ச காலத்துடன் ஆயுள் தண்டனை விதித்துள்ளாா். கணவரின் மரணத்தைத் தொடர்ந்து துக்கத்தில் மூழ்கியதாகக் கூறிய லீ, தனது மகன் மினு ஜோ மற்றும் மகள் யூனா ஜோ ஆகியோரின் பழச்சாற்றில் அதிகப்படியான மருந்துகளை கலந்து குடிக்க வைத்து கொன்றதாகவும் குழந்தைகளுடன் சேர்ந்து தானும் உயிாிழகடக திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மருந்தளவு தவறாகக் கொடுக்கப்பட்டதாகவும் லீ தொிவித்தாா். “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய” குழந்தைகளை அவர் கொன்றதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகக் கருதப்பட்டவுடன் லீ சிறைக்குத் திரும்புவார் என்ற நிபந்தனையுடன், பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் கட்டாய சிகிச்சை பெற நீதிபதி அங்கீகரித்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
தனது குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை – Global Tamil News
8