மாசி சாம்பல் போத்தல்களுக்கு மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கடத்திச் சென்ற மூவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.11.25) யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதை மாத்திரை விற்பனை தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன் போது குறித்த நபர்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாசி கருவாட்டு சாம்பல் போத்தல்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்த நிலையில், அவ்வாறு கொழும்பில் இருந்து மாசி சாம்பல் போத்தல்களை எடுத்து வரும் போது அவற்றுக்குள் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளையும் கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாசி சாம்பலுடன் போதை மாத்திரைகளை கடத்திய மூவர் யாழில் கைது! – Global Tamil News
12