உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியேதுமின்றி வீதிகளில் பெயர்பலகைகளை தொல்லியல் திணைக்களம் நாட்டமுடியாதென நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களில் தொல்பொருள் துறையால் நிறுவப்பட்ட தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் வழக்கில்,கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்று உத்தரவை பிறப்பித்துள்ளது. வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை தலா ஜந்து இலட்சரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க வாழைச்சேனை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுதாகரன், துணைத் தலைவர் குழந்தைவேல் பத்மநிதன், பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தன் சிவராசா சிதம்பரன் பிள்ளை சண்முகநாதன் ஆகிய நான்கு பேரும் அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள தொல்பொருள் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசைப் பலகைகளை அகற்றியமை தொடர்பாக தொல்பொருள் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஏனையோர் தலைமறைவாகியிருந்தனர்.இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் கைதானவர் ஆஜர்படுத்தப்பட்டதுடன் ஏனையவர்களிற்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களிற்கே அதிகாரம்!
2