10,000 ஆண்டுகளுக்குப் பின்னா் வெடித்த எரிமலை – Global Tamil News

by ilankai

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னா்  தற்போது வெடித்துள்ள சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.  எத்தியோப்பியாவின் அஃபார் (Afar) மாகாணத்தில் இந்த எரிமலை அமைந்துள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23)  இந்த எரிமலை சக்திவாய்ந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எரிமலையிலிருந்து கரும்புகை, சாம்பல் மற்றும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு ஆகியவை வெளியேறியுள்ளன. சாம்பல் புகை மண்டலம் சுமார் 33,000 முதல் 50,000 அடி உயரம் வரை சீறிப் பாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பு நிகழ்ந்த பகுதி மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts