தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! – Global Tamil News

தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! – Global Tamil News

by ilankai

தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! பெயர் பலகைகளை அகற்றிய  வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை! by admin November 25, 2025 written by admin November 25, 2025 வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபையின் ஒப்புதலுடன் அறிவிப்புப் பலகையை வைக்க சந்தேக நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts