மெஸ்ஸியின் ஒரு புதிய சாதனை – Global Tamil News

by ilankai

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸி தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.  தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 1,300 கோல்களுக்கு (கோல்கள் + அசிஸ்ட்கள்) பங்களித்த முதல் வீரர் என்ற  மாபெரும் சாதனையை அவர் எட்டியுள்ளார்.  தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து  சாதனை படைத்துள்ளாா். எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்பரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளாா். அதிக கோல்களை அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,213 கோல்கள் பங்களிப்பை (954 கோல்கள் + 259 அசிஸ்ட்ஸ்) நிகழ்த்தியுள்ள நிலையில்  ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் மெஸ்ஸி இந்த வரலாற்று சாதனையை  நிகழ்த்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related Posts