புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்! – Global Tamil...

புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்! – Global Tamil News

by ilankai

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என என கனேடிய தூதுவர் வலியுறுத்தி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நேற்று (24.11.25)  இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தியதாக விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார். மேலும், கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார். குறிப்பாக இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” எனவும்  தூதுவர் வலியுறுத்தியுள்ளார் என அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts