கொக்காவில் இராணுவ முகாமில்  துப்பாக்கிச்சூடு – ஒருவா் காயம் – Global Tamil...

கொக்காவில் இராணுவ முகாமில்  துப்பாக்கிச்சூடு – ஒருவா் காயம் – Global Tamil News

by ilankai

முல்லைத்தீவு, கொக்காவில் 4 இல் உள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம்  காவல்துறையினா் தொிவித்துள்ளனா். காயமடைந்த இராணுவ வீரர் தெ ஹியத்தகண்டியாவைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவ வீரர்   எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த இராணுவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயன்றாரா என்பது குறித்து ம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Spread the love  இராணுவ வீரர்கொக்காவில் இராணுவ முகாம்துப்பாக்கிச்சூடு

Related Posts