திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்!

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்!

by ilankai

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது.சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலையில் நடைபெற்ற இந்த போராட்டமானது பிரித்தானிய அல்பேட்டன் பாடசாலை முன்பாக நடைபெற்றது. பேரினவாத அரசியலின் முகமாகக் கருதப்படும் ரில்வின் சில்வாவின் (JVP–NPP) பிரித்தானிய வருகைக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து பங்கேற்ற இந்த போராட்டத்தில், தமிழர் உரிமைகள், இனப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று நீதி குறித்து வலியுறுத்தும் கோஷங்கள் முழங்கப்பட்டன.

Related Posts