குழந்தையின் நகை திருட்டு – சந்தேகத்தில் சித்தப்பா கைது! – Global Tamil News

by ilankai

தனது சகோதரனின் குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க நகையை களவாடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க நகை திருட்டு போயுள்ளதாக சுன்னாகம்  காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர்  குழந்தையின் தந்தையின் சகோதரனான, குழந்தையின் சித்தப்பாவை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் போதைக்கு அடிமையானவர் எனவும், அவரை குழந்தையின் நகையை திருடிய சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

Related Posts