பாகிஸ்தானின் துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்! – Global Tamil News

by ilankai

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அவவ்விடத்திற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். மற்றைய நபர் இராணுவத் தலைமையக வளாகத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த 11 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts